முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு!

முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு!

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைகளில் ஒரு பகுதியை ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில் முப்படைகளின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இஸ்ரேலில் கட்டுமான துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 67 பேர் இந்த தொழில் வாய்ப்புக்களுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

ஓய்வு பெற்றுக்கொண்ட 44 வயதுக்கும் குறைந்த படையினருக்கு பயிற்சி வழங்கி பரீட்சை நடாத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.