கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்!

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்!

இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்

எவ்வாறாயினும், 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத பட்சத்தில், தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.