பார ஊர்தி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் பலி!
![பார ஊர்தி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் பலி!](https://tamilvisions.com/uploads/images/202403/image_870x_65f146c61bc74.jpg)
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.
விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் பார ஊர்தியும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.