வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி!

வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி!

பத்து பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியை பெற்று கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பெரும்போகத்தில் 3.6 மெட்ரிக் டன் விளைச்சலைப் பெற்றுகொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 2.4 மில்லியன் மெட்ரிக் டொன்களாகும்.

சில மாகாணங்களில் சிறந்த அறுவடை கிடைப்பதுடன், இந்த விளைச்சலுக்காக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் வறட்சி ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.