மன்னிப்புக் கோரினார் தியாகி - 'பணத்தின் செல்லாத் தன்மையை உணர்த்தவே அப்படி செய்தேன்'

மன்னிப்புக் கோரினார் தியாகி - 'பணத்தின் செல்லாத் தன்மையை உணர்த்தவே அப்படி செய்தேன்'

பணத்தை காலால் மிதித்து அதற்கு அவமரியாதை செய்த யாழ்ப்பாண கோடீஸ்வரர் தியாகி என்பவர் நேற்று மாலை வலைத்தள பதிவாளர் ராஜூ விவ்ஸ் என்பவருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

தான் பணத்தின் செல்லாத் தன்மையை பிறருக்கு உணர்த்தவே அப்படி செய்ததாக அவர் கூறுகிறார்.

இலங்கை சட்டத்தின் படி பணத்தை சேதப்படுத்துவதோ, அதனை அவமதிப்பதோ, பணத்தில் உள்ள சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்துவதோ பாரிய குற்றச் செயலாக கருதப்படும்.

பணத்தை உழைப்பதற்கு பலர் சொல்லோணோ துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஒரு சில தனவந்தர்கள் அந்த பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கால் தூசைப் போன்று கணக்கில் கொள்கின்றனர்.

இலங்கை நாணயம் இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமே பெறுமதி. அதனை செல்லாக்காசு என்று கூறுவதற்கு தியாகி ஒன்றும் வேற்றுக்கிரகவாசியல்ல..

இவருக்கு முன்னரும் இவருக்கு பின்னரும் பலர் உதவிகளை வழங்கி வருகிறார்கள் ஆனால் யாரும் பணத்தை அவமதிக்கவில்லை.

உடல் குருகி வியர்வை சிந்தி உழைப்பவனுக்கே அதன் அருமை தெரியும்..

கொள்ளை லாபம் வைத்து பொருட்களை விற்று வந்த வண்ண காகிதம் அவர்களைப் போன்றவர்களுக்கு வெறும் காகிதமாகவே தெரியும்..

உதவி தேவையானவர்கள் கோடி பேர் இருந்தால் என்ன அவர்களுக்கு தேவையானவற்றை விளம்பரமின்றி தனிப்பட்ட முறையில் செய்து விட்டு போகலாமே.

தொழில் வாய்ப்பின்றி வடக்கில் மாத்திரம் எத்தனை இளம் வயதினர் துன்பமுற்று இருக்கிறார்கள்.

அவர்களை தெரிவு செய்து இலவசமாக மக்களுக்கு பணத்தை கொடுத்து சோம்பேறிகளாக ஆக்குவதை விடுத்து தொழில்வாய்ப்புகளையும். வியாபார முயற்சிகளையும் ஆரம்பித்து கொடுத்தால் சிறந்தது.

அறியாமையாலும், பணத்திமிரிலும் ஏழை மக்களையும், நாணயத்தாளையும் அவமதிப்பது எவ்வளவு மன்னிப்புக் கோரினாலும் குற்றம் குற்றமே..

மற்ற ஊடகங்களை விமர்சிக்கும் அவர் தன் பின்னால் சுற்றும் ஊடகங்களுக்கு மாத்திரம் செவ்வி வழங்குவது ஏன்?