இறப்பர் உற்பத்தியை 60 வீதத்தால் அதிகரிக்க திட்டம்!
![இறப்பர் உற்பத்தியை 60 வீதத்தால் அதிகரிக்க திட்டம்!](https://tamilvisions.com/uploads/images/202408/image_870x_66ab83ae95b3b.jpg)
உலர் வலயத்திற்குட்பட்ட மொனராகலை, அம்பாறை, பதுளை போன்ற பிரதேசங்களில் 1,00,000 ஏக்கர் இறப்பர் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலங்கையில் வருடாந்த இயற்கை இறப்பர் உற்பத்தியை 60 வீதத்தால் அதிகரிக்கும் நோக்கில் இறப்பர் பயிர்ச்செய்கை பெருந்திட்டம் அடுத்த சில வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிடப்பட்ட இறப்பர் (TSR) உற்பத்தியில் பணிபுரியும் தொழிலதிபர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்