சாரதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் விஷேட அறிவிப்பு!!!
பலாங்கொடை ஊடாக ஹட்டன் பதுளை வேவல்வத்த நோக்கி பயணிக்கும் சாரதிகள் பலாங்கொடை போக்குவரத்து பொலிஸார் விடுக்கும் விஷேட அறிவிப்பு.

பலாங்கொடை மரத்தென்ன தொடக்கம் ஹட்டன் கெம்பியன் வரை அலுத்நுவர பதுளை வரை
பலாங்கொடை வேவல்வத்த வரை உள்ள வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதோடு வீதிகளில் மண் மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளது.
அதிக காற்று காரணமாக வீதி ஓரங்களில் உள்ள மரங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
மேற்குறிப்பிட்ட வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பலாங்கொடை போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.