மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர - ஜனாதிபதி விசேட பணிப்புரை!

மத்திய கிழக்கிலிருந்து  இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர - ஜனாதிபதி விசேட பணிப்புரை!

மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம், திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மத்திய கிழக்கில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார்.

சுமார் 12,000 இலங்கை தொழிலாளர்கள் இஸ்ரேலிலும், 15,000 பேர் ஜோர்தானிலும், 7,500 பேர் லெபனானிலும், சுமார் 500 பேர் எகிப்திலும் மோதல் வலயங்களில் பணிபுரிவதாக அமைச்சர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானின் தலையீடு காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.