2ம் லெப். மாலதியினதும், பன்னிரு வேங்கைகளினதும் 36ம் ஆண்டு வணக்க நிகழ்வும் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும்!
பிரித்தானியாவில் தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 36ம் ஆண்டு வணக்க நிகழ்வும் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
வளாகத்தில் மாவீரர் பொதுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
பொதுச்சுடர்களை திருமதி.சியாமளா, திருமதி.ஜெயந்தி, செல்வி.ரமணி, திருமதி.அருளினி , திருமதி.லதா ஆகியோர் ஏற்றியதை தொடர்ந்து, தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.
பிரித்தானியாவின் தேசிய கொடியினை திருமதி ஜெசிந்தா அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசிய கொடியினை திருமதி.பூங்குயில் அவர்கள் ஏற்றினார்.
தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
பொது மாவீரருக்கான திருவுருவபடத்திற்கு திருமதி.துக்சி அவர்கள் சுடரேற்ற, முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவருடைய திருவுருவ படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.அபிராமி அவர்கள் ஏற்றினார்.
தொடர்ந்து பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.நிலா அவர்கள் ஏற்றினார். தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களுடைய திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை திருமதி.சாதனா அவர்கள் அணிவிக்க, பன்னிருவேங்களுக்கான மலர் மாலையினை திருமதி.கல்யாணி அவர்கள் அணிவித்தார்.
அகவணக்கத்தினை தொடர்ந்து மலர் வணக்கத்தினை திருமதி.தயாளினி அவர்கள் ஆரம்பித்து வைக்க நிகழ்வுகள் கலந்து கொண்ட அனைவரும் ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் நடைபெற்றன.
மாவீரர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
வரவேற்பு நடனத்தினை செல்வி.சர்வீகா அவர்கள் வழங்கினார்.
பிரதான உரையினை திருமதி.பூங்குயில் அவர்கள் தமிழிலும் நிகழ்வில் கலந்து கொண்ட இளைய தலைமுறைகள் புரிந்து கொள்ள கூடிய வகையில் ஆங்கிலத்தில் செல்வி.சௌமியாவும் வழங்கியிருந்தனர்.
மாவீரர் மாலதி அவர்களின் நினைவு பாடலுக்கு இளையவர்களான செல்வி.பிரணவி செல்வி.அபினா ஆகியோர் நடனம் ஒன்றினை வழங்கினர். நினைவு கவிதையினை திருமதி.நிலா அவர்கள் வழங்க, பாடல் ஒன்றினை செல்வி.சானுகா அவர்கள் வழங்கியிருந்தார்.
எமது தேசத்தின் பெண் விடுதலை சார்ந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய, பெண்கள் எழுச்சி நாளுக்குரிய சிறப்புரையினை செல்வி.நிறையரசி சோதிதாஸ் அவர்கள் வழங்கினார்.
எழுச்சி பாடல்களை எழுச்சி பாடகர்கள் திரு.மைக்கல் திரு.சுரேஸ் ஆகியோர் பாடி, நிகழ்வினை எழுச்சி ஊட்டியிருந்தனர்.
இறுதியில் திருமதி.சத்தியவாணி அவர்களின் நன்றி உரையுடன் உறுதி ஏற்பும் நடைபெற்று, தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு, நிகழ்வுகள் சிறப்புற நிறைவடைந்தன.