ஆசிரியர் – அதிபர்கள் சுகயீன விடுமுறை நாளையும் (27ம் திகதி)

ஆசிரியர் அதிபர்களின் போராட்டத்தின் மீது இன்று (26) காலை கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (27ம் திகதி) சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கத்தின் தொழில்சார் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களின் சம்பள நிலுவையில் மூன்றில் இரண்டு பங்கினை பெற்றுக்கொடுத்தல், பெற்றோரிடம் இருந்து பணத்தை அறவிடாமை போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) காலை 10.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.