கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

முல்லைத்தீவில்  கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழும் நடவடிக்கைள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஒன்பதாவது நாளாக மனிதப் புதைகுழிகளை அகழும் பணிகள் நேற்று (15) வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

இதன்போது மூன்று மனித எலும்புக்கூட்டு பாகங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இலக்கத் தகடு ஒன்றும் தடயப் பொருளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 17 மனித எலும்புக்கூட்டு பாகங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஒன்பதாம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.கங்காதரன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும், அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் வாரமளவில் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அகழ்வு பணிகளில் பங்கேற்றுள்ள முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.