ஆசிரியர்பற்றாக்குறை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கவலை தெரிவித்துள்ளது.
கல்வித்துறையில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான எந்தவொரு உறுதியான திட்டத்தையும் செயல்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்று சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது பல்கலைக்கழக நுழைவுக்குத் தயாராகும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வித் தரத்தை அச்சுறுத்தும் “கடுமையான நெருக்கடி” என்றும் அவர் நிலைமையை விவரித்தார்.
இதற்கிடையில், இந்த ஆசிரியர் பற்றாக்குறையின் நேரடி விளைவாக முறைசாரா பயிற்சித் துறை வளர்ச்சியடைந்து வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2025 2025 வரவு செலவுத் திட்டத்தையும் விமர்சித்த அவர், கல்வித் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க அது தவறிவிட்டது என்று கூறினார்.