சூரியன் இலங்கைக்கு அதி உச்சம் கொடுக்கும் காலம்!
சூரியனின் தெற்கு நோக்கி நகர்வானது (தென் அரைக்கோள பக்கம் - Southern Hemisphere) இருந்து வட அரைக்கோள (Northern Hemisphere) பக்கமாக ஏற்படுகின்ற நகர்வு இம்மாதம் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக நிகழ்கிறது.
இதன்படி நாளை (10) தம்பிரிகம, மெதிரிகிரிய, இஹல, புளியங்குளம், ராஜங்கனய, எப்பாவல, வாகரை போன்ற நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே பகல் 12.11 மணிக்கு சூரியன் அதி உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.