வடக்கு சுமாத்ராவில் பாரிய நிலடுக்கம் - சுனாமி அபாயம் இல்லை!
வடக்கு சுமாத்ரா கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இன்று இலங்கை நேரப்படி காலை 10.50 மணியளவில் இந்தோனேஷியா அருகே Pulau Babi Island இருந்து மேற்காக 394km தூரத்தில் 10km ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
6.6 மெக்னிடியுட் அளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் கரையோரப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுமாத்ரா கடற்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும், இலங்கையை சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அந்த மையம் அறிவுறுத்தியுள்ளது.