நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுக்கும் அளவை எட்டியதாக எச்சரிக்கை!

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் பெருக்கெடுக்கும் அளவை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து விமலசுரேந்திர, லக்ஷபான, நியூ லக்ஷபான, கெனியன் மற்றும் பொல்பிட்டிய நீர்மின் நிலையங்களில் நீர்மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.