கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானம்!
இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய துணைநில் வைப்பு வசதி விகிதம் 9 சதவீதமாக 100 அடிப்படை புள்ளிகளால் தொடர்ந்தும் பேணப்படவுள்ளது.
அத்துடன், துணைநில் கடன் வசதி விகிதத்தை இலங்கை மத்திய வங்கி 10 சதவீதமாக 100 அடிப்படை புள்ளிகளால் தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.