மனித உரிமைகள் தினத்தில் தாய்மார்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசிடம் நீதி கோரிய போதும், தீர்வுகள் கிடைக்காத நிலையில் தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேசத்திடமும் இதுவரை தீர்வு கிடைக்காததினால் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றையதினம் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா? போன்ற பல்வேறு கோஷங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் போது  சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட தாய்மார்களை படம் எடுத்த C.I.D யினரை பெண்ணொருவர் கண்டித்துள்ளார்.

முல்லை கதிர்
சர்வதேசஊடகவியலாளர்
10/12/2024