பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் ஆபத்தான பாலம் - இரவில் பயணிப்போரின் கவனத்துக்கு!
பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில், புளியம்பொக்கணை சந்திக்கருகில் (கண்டாவளை DS OFFICE க்கு அருகில்) வருடக்கணக்காக பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
அந்த பாலத்தடியில் இரவு நேரத்தில் எச்சரிக்கை விளக்குகளோ, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களோ இல்லாத காரணத்தால் மிகவும் அவதானமாக பயணிக்கவும்.
நேர் பாதை என்ற எண்ணத்தில் சென்று விடாதீர்கள். நேற்று காலையிலும் இரண்டு உடலங்கள் வெள்ள நீரில் மூழ்கியநிலையில் மீட்கப்பட்டுள்ளன.
Location Map :
https://maps.app.goo.gl/QLar8oCGx1waHBXp8
கிளிநொச்சியில் இனந்தெரியாத இரு சடலங்களால் பெரும் பரபரப்பு..!
கிளிநொச்சியில் நேற்று (02) மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத இரு நபர்களின் சடலங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
A35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.