மாதாந்த வணக்க நிகழ்வு பிரித்தானியா. பங்குனி மாதம்-2023

1 / 2

1.

மாதாந்த வணக்க நிகழ்வு பிரித்தானியா.

பங்குனி மாதம்-2023

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் 

போது மூன்றாம் மாத காலப்பகுதியில் வீரச்சாவடைந்த பல ஆயிரம் மாவீரர்களையும்

மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், மேலும் அப்பாவித்தனமாக இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் ஆகியோரையும் நினைவு கொள்ளும் நினைவு வணக்க நிகழ்வு வழமை போல் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்

3.30மணிக்கு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

குறிப்பாக முன்னாள் நிதித்துறை பொறுப்பாளரும், படைத்துறைச் செயலாளருமாகிய கேணல் தமிழேந்தி,

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதிகளான கேணல் கோபித், லெப்.கேணல் அமுதாப், சோதியா படையணி பொறுப்பார்களில் ஒருவரான லெப்.கேணல் வானதி/கிருபா, கடல் கரும்புலிகளான கப்பல் கப்டன் லெப்.கேணல் ரஞ்சன்/சிலம்பரசன், கப்டன் இளையவள், மற்றும் மாவீரர் லெப்.கேணல் நயவாணி அவர்களின் தந்தை கப்டன்.திரு ஆகியோர் உட்பட பல்லாயிரம் மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்ததாக வணக்க இந்நிகழ்வு அமைந்தது.

முதல் நிகழ்வாக பொதுச் சுடர் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடரினை திருமதி.அபிராமி, திரு.வீரன் ஆகியோர் ஏற்றினர்.

தொடர்ந்து கொடிப்பாடல் ஒலிக்க தமிழீழ தேசியக் கொடியினை திரு. தாஸ்/வீரப்பன் அவர்கள் ஏற்றி வைக்க, அக வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

பொது மாவீரருக்கான ஈகைச்சுடரினை திரு.சுகந்தகுமார் அவர்கள் ஏற்றி வைக்க, மலர் மாலையினை திரு.கந்தா அவர்கள் அணிவித்தார்.

 நிகழ்வில் கலந்து கொண்ட மாவீரர்களின் உரித்துடையோரில்

லெப்.கேணல் வானதி/கிருபா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது அன்பு மகன் செல்வன் பண்ணரசன் ஈகைச் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தார். கப்டன்.திரு அவருடைய திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரன் திரு.ஜேம்ஸ் அவர்கள் ஈகை சுடரேற்றி மலர் வணக்கம் செய்தார். தொடர்ந்து கடற்கரும்புலி கப்பல் கப்டன் லெப்.கேணல் சிலம்பரசன்/ரஞ்சன் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது பெறாமகன் திரு.ரஜீவன் அவர்கள் ஈகை சுடரேற்றி மலர் வணக்கம் செய்தார். தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் திரு உருவப்படங்களுக்கு ஈகை ஏற்றி மலர் வணக்கம் செய்தனர். மாவீரர் நினைவு பாடல் திரு.சுரேஸ் அவர்களால் பாடப்பட்டது.

மாவீரர்களின் வீர நினைவுகளையும் தியாகங்களையும் திரு.நசீர், திரு.அமுதன், திரு.ஜேம்ஸ் ஆகியோர் பகிந்து கொண்டனர். 

 இறுதியில் உறுதி ஏற்புடன் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" எனும் பாடல் ஒலிக்க தமிழீழ தேசியக்கொடி கையேற்புடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இந்நிகழ்வினை மூத்த ஒலிபரப்பாளர் திருமதி.சுபாசினி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

 மேலும் வளாகத்தில் அமைந்துள்ள அற்புத விநாயகர் ஆலயத்தில் மாவீரர்களுக்கான வழிபாடும் குடும்பத்தினரால் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Next