குளியாப்பிட்டி பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்!
குளியாப்பிட்டி நகருக்கு அருகில் கரத்திப்பல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் 15 மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள், குளியாப்பிட்டி, போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நிட்டம்புவ – கஜூகம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கன்டயினர் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.