77வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழில்

77வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழில்

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது

நிகழ்வின் ஆரம்பத்தில் சோமசுந்தரம் அவினியு வீதியில் இருந்து மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு இடம்பெற்றது.

தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசியம் கீதம் இசைக்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் இலங்கை இராணுவ அதிகாரிகள், பொலிஸார், மத குருமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.