சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு!
சிரியாவில் நேற்று நண்பகல் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று நண்பகல் விவசாயிகளை ஏற்றிக்கொண்டு கனரக வாகனமொன்று சென்றுள்ளதாகவும் இதன்போது குறித்த வானத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரொன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஐவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.