தாய்ப் பால் புரையேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு - யாழில் சம்பவம்!

தாய்ப் பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இன்று (25) உயிரிழந்துள்ளது.

தாய்ப் பால் புரையேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு - யாழில் சம்பவம்!

கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

குறித்த குழந்தையின் தாய் இன்று காலை குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். 

இதன்போது குழந்தை அசைவற்று இருந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு போது, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

பால் புரையேறியே குழந்தை இறந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.