புதுக்குடியிருப்பில், பாரிய விபத்தில் இருந்து தப்பிய சாரதி

புதுக்குடியிருப்பில்,  பாரிய விபத்தில் இருந்து தப்பிய சாரதி

வாழைச்சேனை புதுக்குடியிருப்பில்  இடம்பெறவிருந்த பாரிய வீதி விபத்து டிப்பர் வண்டி சாரதியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கபட்டுள்ளதாக பிரதேச வாசிக்கள் எமது செய்தித்தளத்துக்கு தெரிவித்துள்ளனர். 

இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு காளிகோயில் வீதியானது மிகவும் ஒடுங்கிய வீதியாக காணப்படுவதுடன் இவ் வீதியில் இது போன்ற பல விபத்து சம்பவங்கள் இடம் பெற்றிருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்து இப்பாதையினை திருத்தி தரும்படி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.