கிளிநொச்சி - பூநகரி பகுதியில் விபத்து - இருவர் படுகாயம்

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் விபத்து - இருவர் படுகாயம்

கிளிநொச்சி பூநகரி  பகுதியில் இன்று (07) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 52 மற்றும் 63 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.