இஸ்ரேலில் பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை மீட்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை வலியுறுத்தி இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான போர் ஆரம்பித்து சுமார் 6 மாதங்களாகின்றன.
இந்த நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காசாவில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.