கனடாவில் பயிற்சி விமானம் விபத்து- இருவர் உயிரிழப்பு!
கனடாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயிற்சி விமானிகளாக இரண்டு இந்தியர்கள் பயணித்துள்ளனர்.
அவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு சபை விசாரணை நடத்தி வருகின்றது.