ஆப்கானிஸ்தானில் பலம் வாய்ந்த புவியதிர்வு - 2000 பேருக்கு மேல் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் மேற்கில் ஈரான் எல்லைப் பகுதியில் பலம் வாய்ந்த புவியதிர்வு உணரபட்டுள்ளது.
இதில் சுமார் 2000க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1240ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு ஏற்பட்டுள்ள குறித்த புவியதிர்வானது ரிக்டர் அளவுகோளில் 6.3 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.
இந்த புவியதிர்வால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை புவியதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.20 மணியளவில் இந்த புவியதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புவியதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
புவியதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.