மர்மமான முறையில் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கை தம்பதியினர்!
அவுஸ்திரேலிய மெல்பேர்னில் நகரில் தங்கள் வீட்டிற்கு வெளியே ஒன்றாக இறந்த கிடந்த வயதான இலங்கை தம்பதியினர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மெல்பேர்னின் வெப்ப அலையால் அவர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் உயர்ந்த வெப்பநிலையின் மத்தியில், தங்கள் வீட்டை விட்டு ஏன் வெளியேற முடிவு செய்தனர் என்பது தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று லெ;பேர்னின் வெப்பநிலை 36c ஆக உயர்ந்திருந்தபோது இந்த மரணங்கள் சம்பவத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அத்துடன், இந்த தம்பதியினரின் மரணம் கொலையாக இருக்கலாமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். எனினும் அதற்கான தடயங்கள் கிடைக்கவில்லை.