யுக்ரேனில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
யுக்ரேனின் கோஸ்ட்யாண்டினிவ்கா நகரத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
யுக்ரேனின் கோஸ்ட்யாண்டினிவ்கா நகரத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் குறித்த தாக்குதலில் 28 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து மொஸ்கோ அதிகாரிகள் எந்த வித பதிலையும் வழங்கவில்லை என யுக்ரைன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன் யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அவர் தமது பயணத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட யுக்ரைனுக்கு புதிய இராணுவ உதவிகளை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.