கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்றைய தினமும் தொடரும்
கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்றையதினமும் தொடரும் என சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி அகழ்வுப்பணிகள் நேற்றைய தினம் ஆரம்பமானது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மற்றும் கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
எனினும், சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பணிகள் நேற்றைய தினத்துக்கு பிற்போடப்பட்டது.
அதன்படி, குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு முன்னதாக புதைக்குழியில் இருந்து தோண்டப்பட்ட மண் வெளியே எடுக்கப்பட்டு தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நிலையில், கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.