அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய சற்று அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 316 ரூபா 27 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 93 சதமாக இருந்தது.
அத்துடன், விற்பனை பெறுமதி 328 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 51 சதமாக காணப்பட்டது.