தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மரணமா? எது உண்மை!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக திகழ்ந்த திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மரணமா? எது உண்மை!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக திகழ்ந்த திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இவர் தமிழில் வாரணம் ஆயிரம், குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு  மொழிகளிலும் பல்வேறு படங்களில் திவ்யா ஸ்பந்தனா நடித்திருந்தார்.

இந்தநிலையில், நேற்றைய தினம் திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்ததாக செய்திகள் வைரலாக பரவி வந்தன.

எனினும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காங்கிரஸ் கட்சி இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

அந்த பதிவில், திவ்யா நலமுடன் இருப்பதாகவும், அவர் பற்றி பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து சில ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் அவரது மரணம் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.