நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கும் சாத்தியம்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி - 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
விஜய் சில காலம் சினிமாவில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், அவர் அரசியலில் ஈடுபட போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், விஜய் தரப்பில் இருந்து இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே, நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை விரைவில் ஆரம்பிக்க போவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விஜய் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது விஜய் ரசிகர்களால் விஜய் மக்கள் இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த இயக்கத்தின் ஊடாக தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.