யாழ் மீசாலை ஏ-9 வீதியில் விபத்து

யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் சொகுசு பஸ், வீதியில் சென்ற வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.