பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்ற 6 ஆவது ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதன் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
வெற்றி இலக்காக 177 ஓட்டங்களை பெற துடுபெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, விராட் கோலியின் 77 (49 பந்துகள்) அபாரமான அரை சதம் மற்றும் பின்முனையில் ஆட்டமிழக்காமல் தினேஷ் கார்த்திக்கின் 28 (10 பந்துகள்) ஆட்டத்தினாலும் இவ் வெற்றியை சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றது.