சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

போண்டா மணி நேற்றிரவு (23) வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

1991ஆம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி.

இவர் வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.