உயர்தர பரீட்சைகள் மீண்டும் 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சைகள் டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே, திட்டமிட்ட நேர அட்டவணையின் படியே 04 ஆம் திகதியிலிருந்து பரீட்சைகள மீள ஆரம்பமாகும்.
எனவே, அன்றைய தினம் காலை 8.30 மணிமுதல் 10.30 மணி வரை இரசாயனவியல் முதலாம் பாகம் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் முதலாம் பாகம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சைகள் இடம்பெறும் என்பதுடன் அன்றைய தினம் காலை 8.30 மணியிலிருந்து 11.40 மணி வரை நாடகமும் அரங்கியலும் முதலாம் பகுதிக்கான பரீட்சை இடம்பெறும்.
அன்றைய தினம் பகல் 1.00 மணி முதல் 3.00 மணிவரை அரசியல் விஞ்ஞானம் முதலாம் பாகத்துக்கான பரீட்சை இடம்பெறும்.
4 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நேர அட்டவணையின் படி பரீட்சைகள் இடம்பெறும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்ட நாட்களுக்குரிய அதாவது, நவம்பர் மாதம் 27, 28, 29, 30 ஆம் திகதிகளிலும், டிசம்பர் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளிலும் இடம்பெறவிருந்த பாடங்களுக்குரிய பரீட்சைகள் கீழ்வருமாறு இடம்பெறும்.
நவம்பர் 27 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சை - டிசம்பர் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும்.
நவம்பர் 28 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சை – டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும்.
நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்து பாடங்களுக்கான பரீட்சை – டிசம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும்.
நவம்பர் 30 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சை – டிசம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும்.
டிசம்பர் 02 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சை – டிசம்பர் 30 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும்.
டிசம்பர் 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சைகள் - டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.