நாளைதினம் புத்தளம் மாவட்ட பாடசாலைகளை திறக்க தீர்மானம்!

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பாடசாலைகள் உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
நிலைமைக்கு அமைய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.