தாதிய பயிற்சியாளர் தெரிவு - பரீட்சை தகவல்கள் இணையத்தளத்தில்!

தாதியர் பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான ஆரம்ப நேர்முக பரீட்சை தொடர்பான சகல தகவல்களும் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தாதிய பயிற்சியாளர் தெரிவு - பரீட்சை தகவல்கள் இணையத்தளத்தில்!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய health.gov.lk என்ற சுகாதார அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2019 – 2020 கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தி பெற்று தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை நான்காயிரமாக அதிகரித்துள்ளது.

அத்துடன், தாதியர் பயிற்சியாளர்களை தெரிவுசெய்வதற்கான ஆரம்ப நேர்முக பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.