குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தக் கூடிய வனவிலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக அமைச்சின் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக தீர்மானங்களை எடுக்காது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பினையும் மேற்கொண்டு தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.