பூஜித் ஜயசுந்தர கடமை தவறியதாக சட்டமா அதிபர் குற்றச்சாட்டு!

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலை போதியளவு தகவல்கள் கிடைத்திருந்தும் தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமது கடமையை நிறைவேற்ற தவறியதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

பூஜித் ஜயசுந்தர கடமை  தவறியதாக சட்டமா அதிபர் குற்றச்சாட்டு!

அது தொடர்பான குற்றச்சாட்டுக்களில் பூஜித் ஜயசுந்தரவை குற்றமற்றவராக கருதி கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய தீர்ப்பை வலுவிழக்க செய்யுமாறு கோரி சட்டமா அதிபரினால் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு விசாரணைகளுக்காக நேற்று அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் பிரியந்த நாவான இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குற்றமற்றவர்களாக அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டமை முறையற்றது என மேலதிக மன்றாடியர் நாயகம் இதன்போது மன்றுரைத்தார்.