Breaking News - வௌிநாடு சென்றுள்ள சாணக்கியனுக்கு தடையுத்தரவு - வடக்கு கிழக்கில் கரிநாள் அனுஸ்டிப்பு!
துருக்கியில் AI செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த மன்று பின்வருமாறு தடையுத்தரவொன்றினை பிறப்பிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை குடியரசின் தேசிய தினமான 2025.02.04ம் திகதி கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனனாயக குடியரசின் அரசியலமைப்பின் 08வது சரத்தில் கூறப்பட்டுள்ளதோடு 2025.02.04ம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக்கூடாதென தடையுத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் இன்னும் பலருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்றைய தினம் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுதந்திரம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்து,கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும்,இது போன்று ஊர்வலங்களை நடத்தியும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், இன்றைய தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.