சிறார்களுக்கான காஸா நிதியம் என்ற நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

சிறார்களுக்கான காஸா நிதியம் என்ற நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப்  பெற்றுக்கொடுப்பதற்காக சிறார்களுக்கான காஸா நிதியம் என்ற நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரிதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.