முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024-03-18 திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, இலங்கை அரசு வணிக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் இதுவரை 224 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது.
அவற்றில் 95% லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் வலையமைப்பின் ஊடாக ஒரு முட்டை ஒன்று 37 ரூபா என்ற மலிவு விலையில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் 2024-04-30 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ரமழான் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும், பேக்கரிகளுக்கு தேவையான முட்டைகளை வழங்குவதற்கு தேவையான முட்டை இருப்புக்களை இறக்குமதி செய்யவும் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.