லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: நிறுவன தலைவர் அறிவிப்பு!
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (4) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 145 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 3,835 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 59 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,535 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை மூவாயிரத்து 127ரூபாவாகும்.
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ஆயிரத்து 256 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அதன் புதிய விலை 587 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.