க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்றவர்களின் விபரங்கள்!
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியான நிலையில் அமைய தேசிய மட்டத்தில் சிறப்பு சித்தி பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியான நிலையில் அமைய தேசிய மட்டத்தில் சிறப்பு சித்தி பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய ரீதியில் கணித பாடத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியின் பானுல பெரேரா முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
அதேநேரம், உயிரியல் விஞ்ஞான பாடத்தில், தேசிய ரீதியில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி பிரமுதி பாஷனி முனசிங்க முதலாம் இடம்பெற்றுள்ளார்.
அத்துடன், தேசிய ரீதியில் வணிக பிரிவில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் கவ்தினி தில்சரனி முதலாம் இடம்பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 63 ஆயிரத்து 933 பேர் தோற்றியிருந்தனர்.
அவர்களில், ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 938 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
இது 63.3 சதவீத அதிகரிப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 59 பாடசாலை பரீட்சார்த்திகளினதும், 25 தனியார் பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு பொதுவாக சுமார் 4 மாதங்கள் வரை செல்லும்.
2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அது தாமதமானது.
இந்தநிலையில், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மே 20ஆம் திகதியே ஆரம்பமானது.
அன்று முதல், மிகக் குறுகிய காலத்திற்குள், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் முன்னதாக திட்டமிட்டிருந்தது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணியில், ஏற்பட்ட தாமதம் காரணமாக, குறித்த பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்கள் மீண்டும் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பின், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரையில் www.onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகின!