இன்று முதல் அரசாங்க அச்சகத்தில் விசேட பொலிஸ் சோதனைச் சாவடி!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் அரசாங்க அச்சகத்தின் பாதுகாப்பிற்காக இன்று (14) முதல் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்படவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரச ஊடகப் பொறுப்பதிகாரி சந்திராணி லியனகேவின் எழுத்து மூலமான வேண்டுகோளுக்கு இணங்க, பொரளை பொலிஸாரின் கீழ் இந்த பொலிஸ் நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், பிரதம பொலிஸ் பரிசோதகர் உட்பட 60 – 70 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்காக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் 10 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.