நாட்டில் கஞ்சா பயிரிடுவதற்கான விண்ணங்கள் கோரப்படுகின்றன!

நாட்டில் கஞ்சா பயிரிடுவதற்கான விண்ணங்கள் கோரப்படுகின்றன!

இலங்கை முதலீட்டுச் சபையினால் வழங்கப்படும் காணியில் பாதுகாப்பாக கஞ்சா பயிரிடக் கூடிய முதலீட்டாளர்களின் முன்மொழிவுகளை எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரையில் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள கஞ்சாப் உற்பத்தியாளர்களின் பெரிய அளவிலான நிறுவனங்கள் இதற்கான முன்மொழிவுகளை வழங்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 

இந்த திட்ட முன்மொழிவுகளுக்கு, ஒரு முன்மொழிவுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பாதுகாப்பு வைப்புத் தொகையாக வைக்கப்பட வேண்டும்,மேலும் குறைந்தது ஐந்து இலட்சம் டாலர்கள் முதலீடு செய்யப்பட வேண்டும்.