புதிய தங்க கடன் வட்டி வீதங்கள் இதோ >>>
தங்கக் கடன் அடகு சேவைகளுக்கு இலங்கை மத்திய வங்கி உச்சபட்ச வட்டி வீதத்தை நிர்ணயித்துள்ளது.
அரச வங்கிகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வங்கிகளும் தங்க கடன் அடகு சேவைக்கு உச்சபட்சமாக 18 வீத வட்டியையே அறவிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் அட்டைக்கு 28 வீதத்தையும், தற்காலிக மேலதிக பற்றுக்கு 23 வீதத்தையும் உச்சபட்ச வட்டியாக அறவிட முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய துணைநில் வைப்பு வீதத்தை 11 சதவீதமாகவும், துணைநில் கடன் வசதி வீதத்தை 12 சதவீதமாகவும் தொடர்ந்தும் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.